அங்கே சூரியன் உதிக்கின்றது…

நான் எப்படி சூரியன் உதிக்கின்றது என்று சொல்கிறேன் - அது ஒரு நேரத்தில் ஒரு இழையென அவிழ்கின்றது - பின் தேவலாய கோபுரம் ஊதாநிற கல் போல மிளிர்கின்றது - இந்த செய்தி அணில்களை போல ஓடுகின்றது - மலைகள் தங்களின் குல்லாய்களை கழட்டுகின்றன - கீச்சான்கள் பாடத்தொடங்குகின்றன - பின் நான் மெதுவாக எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் - ‘ஆம், அது சூரியனாய் தான் இருக்க வேண்டும்’ ஆனால் அது மறைவதை பற்றி — எனக்கு தெரியாது - ஊதநிற ஏணி போல தோன்றும் ஒன்றில் மஞ்சள் நிற பையன்களும் பெண்களும் அடுத்த பக்கத்தை அடையும் வரை - தொடர்ந்து ஏறுகின்றனர் ஒரு சாம்பல் நிற ஆசிரியர் - பறவைகளை கூட்டுக்கு அனுப்பி - மெதுவாக மாலைக்கான தடுப்புகளை வைக்கின்றார் -

அங்கே சூரியன் உதிக்கின்றது…
அங்கே சூரியன் உதிக்கின்றது…
Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile