வாட்ஸப்பின் புது விதிகள் எந்த அளவுக்கு உங்களைப் பாதிக்கும்?

Praveen
4 min readJan 11, 2021

ஜனவரி 4க்கு பிறகு வாட்ஸப் பயனர்களுக்கு அவர்களின் பயனர் விதிகளில் மாற்றம் செய்திருப்பதாக பாப்-அப் வடிவில் ஒரு செய்தி வந்திருக்கும். பெரும்பாலனவர்கள் அப்படியே ‘ஓக்கே’ என்ற பச்சை நிற பொத்தனை அழுத்திவிட்டு செல்ல அதில் ஒரு சில முக்கிய பிரிவுகள் மாற்றப் பட்டிருப்பதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விதிகள் பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வருகின்றது. ஒருவேளை உங்களுக்கு இந்த விதிகளில் உடன்பாடில்லை என்றால் செயலியை நீக்கிக்கொள்ளலாம் என்று வாட்ஸப்பே தெரிவிக்கின்றது.

எனவே வாட்ஸப்பின் புதிய பயன விதிகள் என்ன சொல்லுகின்றன, எப்படியெல்லாம் அது பயனர்களை பாதிக்கும், ஒருவேளை நீங்கள் வாட்ஸப் செயலியை நீக்க முடிவு செய்தால் மாற்று செயலிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

இதில் உள்ள அடிப்படை கோளாறு, இதுவரை இருந்த வாட்ஸப் தகவல்களை விருப்பப்பட்டால் பிற பேஸ்புக் செயலிகளோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது இப்போது விருப்பம் நீக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது தான். வாட்ஸப் என்ன மாதிரியான தகவல்களை பயனகளிடமிருந்து சேகரிக்கின்றது என்பதை அறிந்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

வாட்ஸப் உங்களின் மொபைல் எண் மற்றும் புகைப்படத்தைச் சேகரிக்கின்றதை அறிவீர்கள். மேலும், உங்களின் செயலி உபயோகிக்கும் முறை, யார் யாரை தொடர்பு கொள்கின்றீர்கள், செயலியில் எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள், எந்த மாதிரியான சேவைகளை உபயோகிக்கின்றீர்கள், உங்களுடைய ஸ்டேட்டஸ், அதைப் பார்ப்பவர்கள்பற்றிய தகவல்கள், உங்களைப் பற்றிய ‘about’ தகவல் போன்றவற்றையும் வாட்ஸப் சேகரித்து கொள்கின்றது. கருவியளவில் எடுத்துக்கொண்டால் எந்த அலைபேசி வகையை உபயோகிக்கின்றீர்கள், அதன் IP முகவரி, உங்களுடைய இருப்பிடம் போன்றவற்றையும் வாட்ஸப் சேகரிக்கின்றது. இப்போது இந்தத் தகவல்களைப் பேஸ்புக் மற்றும் அதன் குழும நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து தான் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் உங்கள் வாட்ஸப் பயன தகவல்களைக் கொண்டு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் உங்கள் தேவைக்கு ஏற்ற விளம்பரங்கள் காட்டப்படும். ஒருவேளை இந்தச் செயலிகளை நீங்கள் உபயோகிக்காத போதும் உங்கள் தகவல்கள் சேமிக்கப்பட்டு பேஸ்புக் விளம்பர சேவையை உபயோகிக்கும் பிற நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும்.

மேலும் வாட்ஸப் தற்போது இந்தியாவில் பண பரிமாற்றம் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது. ஒருவேளை வாட்ஸப்பை உபயோகப்படுத்தி நீங்கள் பண பரிவர்த்தனை செய்யும்பட்சத்தில் உங்கள் வங்கி தொடர்பான தகவல்கள், ஏதேனும் பொருட்கள் வாங்கியிருப்பின் அந்தத் தகவல்கள், அவை அனுப்பப்படும் முகவரி போன்றவையும் வாட்ஸப்பால் சேகரிக்கப்பட்டு, பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

இதில் குறிப்பிட தகுந்தது இந்த விதிகள் ஐரோப்பிய யூனியனில் செல்லுபடியாகது என்பது தான். காரணம் அவர்களின் கண்டிப்பான தகவல் பாதுகாப்பு பற்றிய சட்டங்கள். இந்தியாவில் அம்மாதிரியன விதிகள் எதுவும் இல்லாத நிலையில், நிசமாகவே நாம் கவலைப்பட காரணம் இருக்கின்றது. ஏனெனில் ஐரோப்பிய யூனியன் விதிகளின் படி ஒரு சேவையை உபயோகப்படுத்துவதற்காகத் தரப்படும் தகவலானது அதற்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, இப்போது நான் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாராடு தொடர்புகொள்ள கொடுக்கப்படும் அலைப்பேசி எண்னானது, வணிக நிறுவனங்களின் நலனுக்காகத் தரப்படக் கூடாது. மாறாக, வாட்சப்பின் தற்போதைய விதிகள் அவ்வாறு தரப்படுவது மட்டுமின்றி வணிக சேவையாகப் பேஸ்புக் மூலம் பிறருக்கு வழங்குவதற்கும் வழி செய்கின்றது.

இதை ஒரு உதாரணமாகச் சொன்னால் இன்னும் எளிதாக விளங்கும். உங்கள் அலைபேசி எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஒரு மொபல் கடையில் உங்கள் நம்பரை சொல்லுகின்றீர்கள். உங்களுக்கு அவர் ரீசார்ஜூம் செய்து விடுகின்றார். ஆனால் உங்கள் நம்பரை பக்கத்து தெரு மளிகை கடைக்காரருக்கும், பக்கத்து ஊர் ஜவுளி கடைக்கும் விற்று விடுகிறாரென வையுங்கள், அவர்களும் உங்களுக்கு ஸ்டாக் வந்திருச்சே என்று செய்தி அனுப்பினால் சங்கடாமாய் உணர்வீர்கள் அல்லவா அது தான் இப்போது நடப்பது. இதை இன்னும் தீவிரமாகப் பார்த்தால், உங்கள் மொபைல் கடைக்காரர் மறுமுறை நீங்கள் அங்குப் போகும்போது உங்களுக்கு ஒரு மாசத்து ப்ரீ ரீசார்ஜ் ஆனா நான் சொல்லற ஒரு ஆப் மட்டும் இன்ஸ்டால் பண்ணிக்கனும். அது ஒன்னும் பண்ணாது நீங்க என்ன இன்டெர்நெட்ல தேடறீங்க ப்ளஸ் எங்க இருக்கறீங்கங்கற தகவல மட்டும் எனக்கு அனுப்பும் வேற எதும் இல்லை என்று சொல்லுகிறாரென வையுங்கள், நீங்களும் தலையாட்டிக்கொண்டு வந்து விடுகிறீர்கள். அன்று சும்மா ஏதோ ஆர்வத்தில் சிகரெட்டில் என்னென்ன வகை இருக்கின்றது என்று தேடிப்பார்க்க, மறுநாள் மனைவியோடு பஸ் ஏறப்போகும்போது தம்பி புது சிகரெட் ப்ராண்ட் வந்திருக்கு ட்ரை பண்ணரீங்களா என வழியில் இருக்கும் கடைக்காரர் கேட்டால் கொஞ்சம் சங்கடம் தானே? இது நாம் பொதுவாக அனுமானிப்பது. இன்னும் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு நீங்கள் எதை எப்போது விரும்ப வேண்டும் என்பது வரை முடிவு செய்ய முடியும் என்கின்றனர்.

மேலும், இந்தத் தகவல்கள் பிற நிறுவனங்களிடையே பகிர்ந்து கொள்ளும்போது திருடு போனால் அது சார்பாக நீங்கள் வாட்சப்பையோ பேஸ்புக்கையோ கேள்வி கேட்க முடியாது. உங்கள் UPI மொபைல் நம்பரும், வாட்சப் நம்பரும் ஒன்றாய் இருந்து அது வாட்ஸப்க்கு வெளியே கசிந்து ஊடுருவல்காரர்களால் உங்கள் வங்கி பரிவர்த்தனை தவறாகப் பயன்படுத்தப்பட்டால், இதில் வாட்சப்பை யாரும் ஏன் தகவலைச் சரியாகப் பாதுகாக்கவில்லையெனச் சட்டபூர்வமாகக் கேள்வி கேட்க முடியாது. மேலும் வாட்சப் சொல்லும் என்கிர்ப்ஷான் வாதம் மெசேஜுகளுக்கு வேண்டுமானால் சரியாய் இருக்கலாம் ஆனால் அது மெட்டா டேட்டாவுக்கு பொருந்தாது. இதற்கு முன் அமெரிக்காவில் பல வழக்குகளில் வெறும் வாட்சப் மெட்டா டேட்டாவை மட்டும் வைத்தே மிகசுலபமாகக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் புகைப்படங்கள், உரலிகள் போன்றவை வாட்சப் சர்வரில் சேமிக்கப்படுகின்றன. ஏற்கனவே வாட்சப்பில் ஒரு அமேசான் லிங்க் அனுப்பினால், அந்த நபரின் பேஸ்புக், யூட்யூப் விளம்பரங்களில் அது சம்பந்தமான விளப்பரங்கள் வருவதாகப் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, ‘நம்ம அனுப்பற மெசேஜ வச்சி என்ன பண்ண போரானுக’ என்றோ, ‘சரி, பேஸ்புக்கு மட்டும் தானே போகும்’ என்று நினைத்துவிடாதீர்கள். ஏறத்தாழ இது “2:00 AMக்கு பல்லாவரம் டாஸ்மாக்கிலிருந்து கவிதாவுக்கு மெசேஜ் அனுப்பினேன்” என்பதை உங்கள் வாசல் சுவற்றில் எழுதி வைப்பதை போன்றது. செய்தியின் முக்கியத்துவம் அது யாரை சென்றடைகிறது என்பதில் தான் இருக்கின்றது.

வாட்சப்பின் சமீபத்திய அறிவிப்புக்குப் பின் இது சம்பந்தமாகப் பலர் எச்சரித்தும், பலர் சிக்னல் போன்ற மாற்று செயலிகளுக்கு மாறியும் வருகின்றனர். டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் வாட்சப்பில் பணி தொடர்பான எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாமெனத் தன் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த நிலையில், நீங்கள் ஒரு வாட்சப் பயனாளறாக இருந்தால் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் கேள்வி பதிலாகக் கீழே:

ஏற்கனவே வாட்ஸப் இந்தத் தகவல்களைத் திரட்டிக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் பிப்ரவரி 8ல் இருந்து இந்தத் தகவல்கள் பேஸ்புக் மற்றும் அதன் பிற நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும்.

இல்லை. அம்மாதிரியான திட்டம் எதுவும் இல்லையென வாட்சப் தெளிவு படுத்தியுள்ளது. ஆனால் உங்களின் வாட்சப் தகவல் பிற பேஸ்புக் தளங்களில் விளம்பரம் காண்பிப்பதற்க்கு உபயோகித்து கொள்ளப்படும். அதே சமயம் வாட்சப்பில் பிஸினஸ் அக்கெளண்டுகள் என்று இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அவர்களுடன் இந்தத் தகவல்கள் வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்ளப்படும். எனவே அவர்கள் நேரடியாக வாட்ஸப்பில் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். அவர்களுக்கு நீங்கள் அனுப்பும் தகவல்களின் பாதுக்காப்புக்கு வாட்சப் எந்த விதமான உத்திரவாதமும் வழங்காது. அந்தந்த நிறுவனத்தின் தகவல் கையாளுதல் விதிகளின் படி அவை செயல்பட்டுக்கொள்ளலாம்.

வாட்சப்பின் இப்போதைய விதிகளின் படி நீங்கள் ஒரு பிஸினஸ் அக்கெளண்டுக்கு ஒரு பொருள் தேவையெனச் செய்தி அனுப்பினால் அந்தத் தகவல் பிற அதே போன்ற அக்கெளன்டுகளுக்கும் பகிர்ந்து கொள்ளப்படும். எனவே, தகவல்களின் ரகசியம் மற்றும் உங்களின் விருப்ப தேர்வுகளில் பிரச்சனை ஏற்படக்கூடும்.

ஏதுமில்லை. ஒருவேளை உங்களுக்குப் புதிய விதிகளை ஏற்றுக்கொள்ளும்படியான செய்தி ஏதும் வராதிருந்து இனி வந்தால் ‘ஏற்றுக்கொள்கிறேன்’ என்கின்ற பொத்தானை அழுத்த வேன்டியது மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டியது.

அப்படியெனில் வாட்ஸப் உபயோகிப்பதை விட்டு வெளியேருவதை தவிர வேறு வழி இல்லை. அதற்கு நீங்கள் வாட்ஸப் செயலியை நீக்கினால் மட்டும் போதாது, அதற்கும் முன் செட்டிங்கிஸ்ல் சென்று உங்கள் கணக்கையும் நீங்கள் நீக்க வேண்டும். (Settings > Accounts > Delete my account)

ஒப்பன் சோர்ஸ் செயலிகள் முதற்கொண்டு பல மாற்று செயலிகள் உள்ளன. குறிப்பாக டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகிய இரண்டு செயலிகளும் சமீபத்தில் அதிக கவனம் பெற்றுள்ளன.

உபயோகத்தின் அடிப்படையில் பார்த்தால் டெலிகிராம் சிறந்தது. பாதுகாப்பின் அடிப்படையில் சிக்னல். மேலும் சிக்னல் பயனர் குறித்த எந்த விதமான தகவல்களையும் சேமிப்பதில்லை. ஆனால டெலிகிராம் ஒரு சில தகவல்களைச் சேகரித்தாலும் இதுவரை அரசு, வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றுடன் பகிர்ந்து கொண்டதில்லை என்று கூறுகின்றது. வருங்காலத்தில் பிஸினஸ் அக்கெளண்டுகளில் மட்டும் விளம்பரம் செய்ய இருப்பதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.

கீழ்காணும் தகவல்களை முறையே வாட்சப், டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகள் உபயோகிப்பாளரிடம் இருந்து சேகரிக்கின்றன.

1. வாட்சப்:

  1. செயலி இருக்கும் கருவி
  2. பயன பற்றிய தகவல்கள்
  3. விளம்பரம் பற்றிய தகவல்கள்
  4. பொருள்கள் வாங்கிய தகவல்கள்
  5. தோரயமான இடம்
  6. அலைபேசி எண்
  7. மின்னஞ்சல் முகவரி
  8. அலைபேசியில் இருக்கும் பிறர் எண்கள், தகவல்கள், மின்னஞ்சல்கள்
  9. வாட்சப் உபயோகிக்கும் முறை
  10. உபயோகிக்கும் போது செயலில் ஏற்படும் கோளாறுகள்
  11. செயலியின் செயல் திறன்
  12. வேறு சோதனைகள் ஏதும் இருப்பின் அது பற்றிய தகவல்கள்
  13. பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள்
  14. வாட்ஸப் பயனர் உதவி பற்றிய தகவல்கள்
  15. பகிர்ந்து கொள்ளப்படும் படங்கள், இணையதள உரலிகள் பற்றிய தகவல்கள்

2. டெலிகிராம்:

  1. பயனர்எண்
  2. பயனர் பற்றிய தகவல்கள்
  3. அலைபேசியில் இருக்கும் பிறர் எண்கள்

3. சிக்னல்:

Originally published at https://prvn.info on January 11, 2021.

--

--

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile