சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா: ஜகமே தந்திரம் — ஒரு பார்வை

Praveen
3 min readJun 19, 2021

ஏன் ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என தனுஷ் அவ்வளவு விரும்பினாரென புரிகின்றது. படம் முழுக்கவே விசிலடிச்சான் குஞ்சுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருகின்றது. லோக்கல் தாதா லண்டன் போனால் என்கிற சுவரசியமான ஒன்லைன், இலங்கை பிரச்சினை பழிக்கு பழி என எங்கங்கோ இரண்டரை மணி நேரம் சுத்துகின்றது. இடையில் காத்துக்கு எங்க போவேன் என்கிற மாதிரி லாஜிக் லாஜிக் என்று நம் மனம் பதறுகின்றது.

நாட்டின் அமைச்சருக்கே அறிவுரை சொல்லுகின்ற அவருக்கு உதவுகின்ற தாதா லண்டன் தாதா பீட்டர். அவருக்கு எதிராக செயல்படும் ஈழ தமிழ் குழுவான சிவதாஸ் குழுவினரை எப்படி மடக்குவது என்று தெரியவில்லை. எனவே, ஐடி கம்பெனி அப்பரைசல் மீட்டிங்கில் எங்கூர் தாதா சுருளி தான் பெஸ்டு எனச்சொல்லி சம்பள உயர்வு கேட்டுக் ஆளோடே அந்த தாதாவை தேடி கிளம்புகிறார் பீட்டரின் வலதோ இடதோ அல்லது அல்லையோ கை. வந்து சைடு பிஸினசாக பரோட்டாவும் மெயின் பிஸினசாக ஆட்களையும் போட்டுக்கொண்டிருக்கும் சுருளியை பார்க்கிறார்கள். நாட்டு துப்பாக்கியில் அவர் டிஸ்கோல் டிஸ்கோல் என்று சுடுவதை பார்த்தும், அசால்ட்டாக பீடியில் நாட்டுவெடிகுண்டை பற்ற வைத்து வீசுவதை பார்த்தும் ஹெவியாக இம்ப்ரஸ் ஆகிறார்கள். ஒருமாசம் லண்டன் வந்து எங்களுக்கு உதவோனும் என்று கேட்க்க, வேறொரு பிரச்சினையில் இருக்கும் தனுஷும் (சுருளி) சரி கழுத போவோம் என்று கிளம்புகிறார்.

போனவுடன், சிவதாஸ் சுத்துப்பட்ட நாட்டிலிருந்தெல்லாம் ஆயுதம் கடத்துவதையும், தங்கம் கடத்துவதையும் கண்டுபிடிக்கிறார். கூடவே ஐஸூ குட்டியை பார்த்து காதலிலும் விழுகிறார். என்ன பிரச்சினை என்றால், லெபனாலில் இருந்து எப்படி தங்கம் வருகிறது, 24 கேரட் தங்கத்து இங்கிலாந்தில் மதிப்பு என்ன என்றெல்லான் வந்தவுடனே பீட்டருக்கு வகுப்பெடுக்கும் சுருளிக்கு ஈழதமிழர் பிரச்சினை பிடிபடவில்லையாம். பிறகு ஐஸ்வரிய லட்சுமி, அவரை சுட்டு கொல்ல வந்து ஆனால் அதற்குள் சிவதாஸ் ஆட்களால் சுடப்பட்டு மறுபடி ஐஸாலேயே காப்பற்றப்பட்டு அப்புறம் பிழைத்த பிறகு ஐசே குளுகொஸில் விச ஊசி போட்டு கொல்ல முயற்சிக்கும் போது தான் புரிகின்றது. நமக்கு அதற்குள் மண்டை காய்ந்து விடுகின்றது. இடையில் சுருளியின் பேரம் பேசும் திறனை பார்த்து சிவதாஸ் வேறு உச்சி குளிர்ந்து நம்ம பையன்டா காது ஆடுது பாத்தீயா என்கிறார். அப்புறம் டேய் காசி இப்பிடி துரோகம் பண்ணிட்டீயேடா என்று சொல்லி சாகிறார்.

திருந்திய பிறகு ஹீரோ ரெண்டு அடி வாங்க வேண்டுமே? வில்லன் இடதுசார் எம்.பி ஒருவரை கொல்ல யெஸ் ஆர் நோ கேட்க கெத்தாம நோ சொல்லிவிட்டு வருகிறார். வந்து பார்த்தால் வில்லன் ஆட்கள் வந்து சுருளிவிலாஸ் (சுருளியின் புத்திசாலித்தனத்தில் மகிழ்ந்து பீட்டர் ஒரு சந்தையே அவர் பெயருக்கு எழுதி வைக்கிறார். சுருளியும் அதற்கு லிட்டில் மதுரை என்று பெயர் சூட்டி ஊரில் இருந்து அம்மா நண்பர்களெல்லாம் வந்து சேர, கைலி கட்டிக்கொண்டு பம்மரம் விட்டு மகிழ்கிறார். இடையில் இந்த ஐசுவால் தான் திருந்த வேண்டிய பயங்கரம் ஏற்பட்டு…) வந்து சுட்டு தள்ள செவனே என்று வருச கணக்காக தட்டி கழுவி கொண்டிருந்தவர் செத்து போகிறார். அடுத்து என்ன பழி வாங்கும் படலம் தான். எங்கும் பனிக்கட்டு விழுந்து கொண்டிருக்க, தலைவர் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, நாட்டு வெடிகுண்டுகளை (அவர் கையாலேயே செய்தது) எடுத்துக்கொண்டு பீட்டரை வீட்டிற்கு போய் அவரை பொளக்கிறார். அப்புறம் எதற்க்கென்றே தெரியால ஏழுகடல் ஏழுமலை தான் ஆப்கானிஸ்த்தான், சிரியா, ஈரான், ஈராக் நான்கு நாட்டிற்கும் நடுவில் உள்ள எல்லையில் கொண்டு போய் விட்டுவிட்டு மாட்டுத்தாவணி பாஸ்போர்ட்டை அன்பளிப்பாக கொடுத்து வருகிறார். அத்தோடு சுபம்.

அருமையான ஒளிப்பதிவும், பின்ணனி இசையும் மொக்கையான திரைக்கதையால் வீணாய் போயிருக்கின்றது. மீண்டும், தியேட்டர் ரசிகர்களிக்கென்று எடுத்த படம் ஆதாலால், ஸ்லோ மோஷன் நடை, ஹீரோ பன்ச் டயாலாக்குகள், கண்ணாடி கழட்ட, எல்லாம் சேர்த்து ரெண்டரை மணி நேரம் போகின்றது. பரத்வாஜ் ரங்கன், கார்த்திக் சுப்புராஜின் ஈழ ஆதரவு மனநிலையை அவரின் குறும்படங்களில் இருந்து முந்தைய படங்கள் வரை சொல்லி அதன் முழுவடிவ முயற்சி என்கிறார். ஆனால், அது மனதில் ஒட்டவில்லை என்பதே நிஜம். இடைவேளையை மனதில் வைத்த இரண்டு பகுதி சினிமா இருக்கும் வரை தமிழ் சினிமா உருப்பட வாய்ப்பில்லை. அதே போல, ஏ,பி,சி,டி என்று சென்டர்களை மனதில் வைத்து இதற்கு ரெண்டு சீன் அதற்கு ரெண்டு சீன் என படம் பண்ணினால் அதன் விளைவு இப்படித்தான் இருக்கும். ஒருவேளை, இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாய் கடத்தல் காட்சிகளை அமைத்து, இந்த வேட்டி நாட்டுவெடிக்குண்டையெல்லாம் ஓரக்கட்டி, சிறிய பத்து எபிசோட் சீரியஸ் மாதிரி கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

Originally published at https://prvn.info on June 19, 2021.

--

--

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile