எது சிறந்த டயட்?

Praveen
2 min readMar 29, 2021

சமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். சமீபத்தில் காண நேர்ந்த உணவு குறித்தான ஒரு காணொளியை பற்றி பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

ரான் சேகல் என்பவர் “What’s the best diet for humans” என்ற தலைப்பில் TEDx Rubbianல் உணவு குறித்தான தன் ஆய்வுகள் பற்றி பேசியது. இணைப்பு இங்கே:

ரான் உணவின் தன்மையை ரத்ததின் குளுகோஸ் அளவுகளை கவனிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம் என்கிறார். அதிகமான குளுகோஸ் அளவுகள் வெகு விரைவில் பசியை உண்டக்கும். எனவே மீண்டும் அதிகமான உணவு, அதிக குளுகோஸ் அளவுகள் = உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி.

இதில் சுவராசியமான விஷயம் ஒரே உணவு ஒருவருக்கு குளுக்கோஸ் அளவுகளை அதிகரிப்பதாகவும், இன்னொருவருக்கு குறைப்பதாகவும் இருப்பது தான். மேலும் இந்த குளுக்கோஸ் அளவு விஷயத்தில், நம் வயிற்றில் இருக்கும் ‘கட்’ பேக்டீரியாக்களும் ஒரு முக்கியமான பங்கு வகின்றதாம். நாம் உண்ணும் உணவின் தன்மை இந்த பேக்டீரியாக்களின் ஜீன்களினை மாற்றுவதற்க்கு கூட வாய்ப்புகள் உண்டு.

அதாவது பொதுவான டய்ட் என்று எதுவும் இல்லை. அவரவர் உடல்வாகை பொருத்து ஒரு உணவு கொழுப்பாக சேகரம் ஆவதும் ஆகாததும் என்கிறார்.

ரானின் அமைப்பு thepersonalizeddiet.com என்ற வலைமனையில் இது குறித்தான ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. யார் வேண்டுமானலும் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.

ஒரு அறிவியலாளனாக இந்த முறை எனக்கு திருப்தி அளிகின்றது. வீட்டிலேயே செய்துபார்க்கலாம். ஒரு குளுக்கோமீட்டர் மிஞ்சி போனால் ஆயிரம் ரூபாய் வரும். மற்றவற்றை போலின்றி நம் உணவுகளை நாமே தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது தான் இதன் சிறப்பு. துணிந்தவர்கள் செய்யக்கடவீர்களாக!

Originally published at http://prvn.info.

--

--

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile