Sign in

தமிழ் இந்துவில் இன்று வெளி வந்திருக்கும் கட்டுரை இது: https://bit.ly/3l6tNGH

என்ன தான் நாம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, எல்லார் கையிலும் ஸ்மார்போன் இருக்கிறது என்று பேசினாலும் நிதர்சனம் இது தான். வளர்ந்த மாநிலங்களிலேயே 8% சதவீத மாணவர்களை தான் கல்வி சென்று சேர்கின்றது என்றால் பிற மாநிலங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

பள்ளிகள் திறந்து விட்டாலும், அவை போர்ஷன், தேர்வுகள் என்ற அடிப்படையிலேயே இருக்கும். இதனை கடந்து ஒரு சமூகமா ஒன்று திரண்டால் மட்டுமே இந்த இழப்பை ஈடு செய்ய முடியும்.

சட்டமன்றத்தில் அரசு ஏற்கனவே அறிவித்தது போல, தன்னால்வளர்கலை கொண்டு மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்பதே இப்போது நம் முன் உள்ள ஆகச்சிறந்த வழி. அரசின் அறிவிப்புக்கு முன்பே எழுத்தாளர் ஜெயமோகன் இதை பற்றி விரிவாக ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதை அப்படியே பின் பற்றலாம்.

என்னளவில், ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக…


சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! 5

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை,
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்,
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு, 10

அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகை கூட்டம் 15
செய்தான் அக் கள்வன் மகன்.

கலித்தொகை 51ம் பாடல். கபிலர்.

சுடர் வளை அணிந்தவளே…


ஏன் ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என தனுஷ் அவ்வளவு விரும்பினாரென புரிகின்றது. படம் முழுக்கவே விசிலடிச்சான் குஞ்சுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருகின்றது. லோக்கல் தாதா லண்டன் போனால் என்கிற சுவரசியமான ஒன்லைன், இலங்கை பிரச்சினை பழிக்கு பழி என எங்கங்கோ இரண்டரை மணி நேரம் சுத்துகின்றது. இடையில் காத்துக்கு எங்க போவேன் என்கிற மாதிரி லாஜிக் லாஜிக் என்று நம் மனம் பதறுகின்றது.

நாட்டின் அமைச்சருக்கே அறிவுரை சொல்லுகின்ற அவருக்கு உதவுகின்ற தாதா லண்டன் தாதா பீட்டர். அவருக்கு எதிராக செயல்படும் ஈழ தமிழ் குழுவான சிவதாஸ் குழுவினரை எப்படி மடக்குவது என்று தெரியவில்லை. எனவே, ஐடி கம்பெனி அப்பரைசல் மீட்டிங்கில் எங்கூர் தாதா சுருளி தான் பெஸ்டு எனச்சொல்லி சம்பள உயர்வு கேட்டுக் ஆளோடே அந்த தாதாவை தேடி கிளம்புகிறார் பீட்டரின் வலதோ இடதோ அல்லது அல்லையோ கை. வந்து சைடு பிஸினசாக பரோட்டாவும் மெயின் பிஸினசாக…


நான் எப்படி சூரியன் உதிக்கின்றது என்று சொல்கிறேன் -
அது ஒரு நேரத்தில் ஒரு இழையென அவிழ்கின்றது -
பின் தேவலாய கோபுரம் ஊதாநிற கல் போல மிளிர்கின்றது -
இந்த செய்தி அணில்களை போல ஓடுகின்றது -
மலைகள் தங்களின் குல்லாய்களை கழட்டுகின்றன -
கீச்சான்கள் பாடத்தொடங்குகின்றன -
பின் நான் மெதுவாக எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் -
‘ஆம், அது சூரியனாய் தான் இருக்க வேண்டும்’

ஆனால் அது மறைவதை பற்றி — எனக்கு தெரியாது -
ஊதநிற ஏணி போல தோன்றும் ஒன்றில்
மஞ்சள் நிற பையன்களும் பெண்களும்
அடுத்த பக்கத்தை அடையும் வரை -
தொடர்ந்து ஏறுகின்றனர்
ஒரு சாம்பல் நிற ஆசிரியர் -
பறவைகளை கூட்டுக்கு அனுப்பி -
மெதுவாக மாலைக்கான தடுப்புகளை வைக்கின்றார் -

- எமிலி டிக்கன்ஸன்

Source: https://www.emilydickinsonmuseum.org/ill-tell-you-how-the-sun-rose/


சில படங்கள் எப்போதும் மனதில் நின்றிருக்கும். சிறந்த படம் என்பதால் அல்ல. இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாமே என்பதால். முன்பு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போல. இப்போது கர்ணனை போல.

படத்தை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று ஒரு ஊரின், மக்களின் வாழ்க்கை பதிவு. இரண்டு, தொன்மங்கள் குறியீடதாலாக. மூன்றாவதாக தீமையை அழிக்கும் எளிய கதாநாயகன் எனும் வழக்கமான தமிழ் சினிமாவாக. ஆனால் மூன்றும் ஒரே படமாக வருவதால், திரைக்கதை ஜவ்வாய் இழுக்கின்றது.

பொதுவாக பள்ளர், பறையர் சமூகத்தினர், 7ம் நூற்றாண்டுக்கு முன் பெளத்த மதத்தினராக சமூக படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக சோழர்களால் படியிறக்கப்பட்டார்கள் என்கிறார் அயோத்திதாசர். ஆக நவீன தலித் இலக்கியங்களில் குறியீட்டு ரீதியான இந்து மதம் மீதான விமர்சனம் புரிந்து கொள்ள தக்கது. இதில் இன்னொரு முக்கிய அம்சம், இந்து மத புராணங்களை மாற்று பார்வையில் மீட்டுருவாக்கம் செய்வது. புதிய…


கர்ணன் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறையை 97ஆக காட்டி திமுக மீது அவதூறு பரப்புகிறார் மாரி செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அது பற்றி படித்த போது கிடைத்த தகவல்களை இங்கு தொகுக்கிறேன்.

90களில் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் என்பது அன்றாடம். இதை 80களில் வலுப்பெற தொடங்கிய தலித் அரசியலோடு இணைத்து பார்க்கலாம். அந்த சமயத்தில் தான் தலித்கள் இன்னும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தலித் இலக்கியம், தலித் மைய அரசியல் போன்றவை வேர் கொண்டன. அப்போது உருவாகி வந்த தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். இது பரவி 90களில் தலித்கள் தங்கள் மீதான சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்முறை உக்கிரமாக இருந்தது[1]. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மூன்று சம்பவங்கள் 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறை[2,3], 97ல் நடந்த மேலவளவு படுகொலைகள்[4], 99ல் நடந்த தாமிரபரணி படுகொலைகள்[5]. …


சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த வயதான காலத்தில் யாருக்கு எழுதுவது? அப்படியே எழுதினாலும் இந்த காலத்துப்பெண்கள் கடுதாசியையெல்லாம் மதிப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் முக்கியமானது முன் பின் தெரியாத பெண்ணுக்கு என்னவென்று கடிதம் எழுதுவது? பிரபஞ்சன் எழுதும் கடிதங்கள் சுமாராக பதினைந்து பக்கங்கள் வருமாம். ஆனால் பதினைந்து பக்கத்துக்கு என்ன எழுதினார் என்று தெரியவில்லை. கவிதைகள் எழுதலாம், ஆனால் பொய் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. …


சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், பாலை நிலப்பெண்கள் ஆப்பிள் வேண்டும் என்று அழுததாலும், தங்கள் பொறுமையை இழந்த ஆண்கள் கூட்டம் ஒன்று, இதோ வருகின்றேன் என்று கிளம்பி கைபர் போலன் கணவாய் வழியே சிந்து சமவெளியை அடைந்தது. அவர்கள் வந்த நேரம் பழங்குடி வாழ்க்கையில் இருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்த காலம். வந்தவர்கள் புது மன்னர்களிடம் போய் தங்கள் துன்பத்தை சமஸ்கிருதத்தில் புலம்ப, அதுவே இந்திய தத்துவாமாக வளர்ந்தது என்கினறனர் ஆய்வாளர்கள். இவர்களின்…


சமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து கவனித்து வருகின்றேன். சமீபத்தில் காண நேர்ந்த உணவு குறித்தான ஒரு காணொளியை பற்றி பகிர்ந்துகொள்ளவே இந்த பதிவு.

ரான் சேகல் என்பவர் “What’s the best diet for humans” என்ற தலைப்பில் TEDx Rubbianல் உணவு குறித்தான தன் ஆய்வுகள் பற்றி பேசியது. இணைப்பு இங்கே:

ரான் உணவின் தன்மையை ரத்ததின் குளுகோஸ் அளவுகளை கவனிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம் என்கிறார். அதிகமான குளுகோஸ் அளவுகள் வெகு விரைவில் பசியை…


நான் விவசாயி அல்ல. விவசாயத்தின் அடிப்படைகள் குறித்தும் அவ்வளவு புரிதல்கள் கிடையாது. பால் பாக்கெட்டில் வரும், அரிசி மூட்டையில் கிடைக்கும் என்பதே என் அறிதல்கள். ஆகவே இந்த விவசாயிகள் போராட்டம்பற்றிப் பெரிதாக ஆர்வம் எழவில்லை. நேற்று ரிகானாவின் ட்வீட்டும் அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினர் வரிசையாக வந்து அதற்குப் பதில் ட்வீட் போட்டதும் தான், அப்படி என்ன தான் இந்த விவசாய மசோதா சொல்லுகின்றது, ஏன் விவசாயிகள் எதிர்கின்றனர், தமிழகத்தின் நிலை என்ன என்று தேடிப்பிடித்து படித்துப்பார்த்தேன். புரிந்து கொண்ட வகையில் அதை அப்படியே கேள்வி பதிலாகத் தொகுத்திருக்கின்றேன்.

முதலில் இந்த மசோதா என்ன சொல்லுகின்றது?

மூன்று விஷயங்களை இந்த மசோதா சொல்லுகின்றது. முதலாவது மண்டி முறையிலிருந்து விடுபட்டு, விவசாயிகள் நேரடியாக யாருடன் வேண்டுமானலும் வணிகம் செய்து கொள்ளலாம் என்பது. இரண்டாவது ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்யலாம் என்பது. அதாவது ஆறு மாதத்துக்கு இந்த விலையில் நான் தக்காளி விலைவித்து…

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile | Blabber here: https://anchor.fm/praveen-p-a |

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store