தமிழ் இந்துவில் இன்று வெளி வந்திருக்கும் கட்டுரை இது: https://bit.ly/3l6tNGH

என்ன தான் நாம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, எல்லார் கையிலும் ஸ்மார்போன் இருக்கிறது என்று பேசினாலும் நிதர்சனம் இது தான். வளர்ந்த மாநிலங்களிலேயே 8% சதவீத மாணவர்களை தான் கல்வி சென்று சேர்கின்றது என்றால் பிற மாநிலங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

பள்ளிகள் திறந்து விட்டாலும், அவை போர்ஷன், தேர்வுகள் என்ற அடிப்படையிலேயே இருக்கும். …

சுடர் தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! 5

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை,
அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்,
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என, யானும்
தன்னை அறியாது சென்றேன், மற்று என்னை
வளை…

ஏன் ஜகமே தந்திரம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என தனுஷ் அவ்வளவு விரும்பினாரென புரிகின்றது. படம் முழுக்கவே விசிலடிச்சான் குஞ்சுகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருகின்றது. லோக்கல் தாதா லண்டன் போனால் என்கிற சுவரசியமான ஒன்லைன், இலங்கை பிரச்சினை பழிக்கு பழி என எங்கங்கோ இரண்டரை மணி நேரம் சுத்துகின்றது. இடையில் காத்துக்கு எங்க போவேன் என்கிற மாதிரி லாஜிக் லாஜிக் என்று நம் மனம் பதறுகின்றது.

நாட்டின் அமைச்சருக்கே அறிவுரை…

நான் எப்படி சூரியன் உதிக்கின்றது என்று சொல்கிறேன் -
அது ஒரு நேரத்தில் ஒரு இழையென அவிழ்கின்றது -
பின் தேவலாய கோபுரம் ஊதாநிற கல் போல மிளிர்கின்றது -
இந்த செய்தி அணில்களை போல ஓடுகின்றது -
மலைகள் தங்களின் குல்லாய்களை கழட்டுகின்றன -
கீச்சான்கள் பாடத்தொடங்குகின்றன -
பின் நான் மெதுவாக எனக்குள் சொல்லிக்கொள்கிறேன் -
‘ஆம், அது சூரியனாய் தான் இருக்க வேண்டும்’

ஆனால் அது மறைவதை பற்றி — எனக்கு தெரியாது -
ஊதநிற ஏணி போல தோன்றும் ஒன்றில்
மஞ்சள் நிற பையன்களும் பெண்களும்
அடுத்த பக்கத்தை அடையும் வரை -
தொடர்ந்து ஏறுகின்றனர்
ஒரு சாம்பல் நிற ஆசிரியர் -
பறவைகளை கூட்டுக்கு அனுப்பி -
மெதுவாக மாலைக்கான தடுப்புகளை வைக்கின்றார் -

- எமிலி டிக்கன்ஸன்

Source: https://www.emilydickinsonmuseum.org/ill-tell-you-how-the-sun-rose/

சில படங்கள் எப்போதும் மனதில் நின்றிருக்கும். சிறந்த படம் என்பதால் அல்ல. இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருந்திருக்கலாமே என்பதால். முன்பு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் போல. இப்போது கர்ணனை போல.

படத்தை மூன்றாக பிரிக்கலாம். ஒன்று ஒரு ஊரின், மக்களின் வாழ்க்கை பதிவு. இரண்டு, தொன்மங்கள் குறியீடதாலாக. மூன்றாவதாக தீமையை அழிக்கும் எளிய கதாநாயகன் எனும் வழக்கமான தமிழ் சினிமாவாக. …

கர்ணன் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறையை 97ஆக காட்டி திமுக மீது அவதூறு பரப்புகிறார் மாரி செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அது பற்றி படித்த போது கிடைத்த தகவல்களை இங்கு தொகுக்கிறேன்.

90களில் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் என்பது அன்றாடம். இதை 80களில் வலுப்பெற தொடங்கிய தலித் அரசியலோடு இணைத்து பார்க்கலாம். அந்த சமயத்தில் தான் தலித்கள் இன்னும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தலித்…

சமீபத்தில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரை ஒன்றை படித்த போது, எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றி சுவரசியமான விஷயம் ஒன்று தட்டுப்பட்டது. பிரபஞ்சனின் இளவயதில் தன் கண்ணில் தட்டுப்படும் இளம் பெண்கள் அனைவருக்கும் காதல் கடிதம் தந்து விடுவாராம். தந்த கடிதங்கள் பலனலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் காதல் கடிதம் என்ற செய்தி என்னை நிரம்பவே கவலைக்குள்ளாக்கியது! பின்னே ஒருவருக்கு கூட காதல் கடிதம் எழுதாத ஒருவனுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா? இனி இந்த…

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும்…

சமீபகாலங்களில் மக்களுக்கு உணவின் மீது ஒரு பயம் உண்டாகி, எது சிறந்த உணவு என்பது குறித்து பொதுவெளியில் பெரிய விவாதம் நடந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சிலர் மண்ணின் உணவே மக்களை காக்கும் என்று கூவ, இன்னொரு பக்கம் ‘பேலியோ’ என்று ஒரு மந்திர சொல் தமிழ் சமூகத்துக்கு அறிமுகமானது. இதிலும் வெஜ் பேலியோ என்றொரு சந்து உருவாகி அங்கும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம்மாதிரியான உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து…

நான் விவசாயி அல்ல. விவசாயத்தின் அடிப்படைகள் குறித்தும் அவ்வளவு புரிதல்கள் கிடையாது. பால் பாக்கெட்டில் வரும், அரிசி மூட்டையில் கிடைக்கும் என்பதே என் அறிதல்கள். ஆகவே இந்த விவசாயிகள் போராட்டம்பற்றிப் பெரிதாக ஆர்வம் எழவில்லை. நேற்று ரிகானாவின் ட்வீட்டும் அதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியினர் வரிசையாக வந்து அதற்குப் பதில் ட்வீட் போட்டதும் தான், அப்படி என்ன தான் இந்த விவசாய மசோதா சொல்லுகின்றது, ஏன் விவசாயிகள் எதிர்கின்றனர்…

Praveen

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile | Blabber here: https://anchor.fm/praveen-p-a |

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store