கற்பிக்கும் நேரம் இது
தமிழ் இந்துவில் இன்று வெளி வந்திருக்கும் கட்டுரை இது: https://bit.ly/3l6tNGH
என்ன தான் நாம் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது, எல்லார் கையிலும் ஸ்மார்போன் இருக்கிறது என்று பேசினாலும் நிதர்சனம் இது தான். வளர்ந்த மாநிலங்களிலேயே 8% சதவீத மாணவர்களை தான் கல்வி சென்று சேர்கின்றது என்றால் பிற மாநிலங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.
பள்ளிகள் திறந்து விட்டாலும், அவை போர்ஷன், தேர்வுகள் என்ற அடிப்படையிலேயே இருக்கும். இதனை கடந்து ஒரு சமூகமா ஒன்று திரண்டால் மட்டுமே இந்த இழப்பை ஈடு செய்ய முடியும்.
சட்டமன்றத்தில் அரசு ஏற்கனவே அறிவித்தது போல, தன்னால்வளர்கலை கொண்டு மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்பதே இப்போது நம் முன் உள்ள ஆகச்சிறந்த வழி. அரசின் அறிவிப்புக்கு முன்பே எழுத்தாளர் ஜெயமோகன் இதை பற்றி விரிவாக ஒரு குறிப்பு எழுதியுள்ளார். அதை அப்படியே பின் பற்றலாம்.
என்னளவில், ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக திரள வேண்டும். அவர்களுக்கு அந்த ஊர் பள்ளியிலோ அல்லது வேறு ஒரு பொது இடத்திலோ மின்சாரம், இணைய வசதி செய்து தரப்பட வேண்டும். மூத்த மாணவர்கள், இளைய மாணவர்களுக்கு கல்வியில் உதவிகள் செய்து, அதே நேரம் தங்கள் பாடங்கலையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம்.
பிற செயலார்வர்களர்கள், மென்பொருள், கட்டுரைகள், குரல் குறிப்புகள், இணையப்பக்கங்கள் போன்றவற்றை உருவாக்கி இவர்களுக்கு இணையத்தில் வழங்கலாம். காலாண்டு அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்சி என்று கூறி ஒட்டு மொத்தமாக பாடத்திட்டத்தை வகுத்து, அதில் மாதமொருமுறை அலகு தேர்வுகள் மட்டும் நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடலாம்.
போட்டித்தேர்வுகளுக்கென்று ஆன்லைன் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கென பயிற்றுனர்களின் உரைகளும், மாதிரி கேள்விகளும் தரப்பட்டு, தேர்வு எழுதுவோர் தங்களுக்குள் விவாதித்து கற்று கொள்ளுமாறு ஏற்பாடுகளை செய்து தரலாம்.
எந்த அரசுக்கும் அதன் செயல் திறனுக்கு என்று ஒரு அளவிருக்கும். ஆகவே, எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பாராது, மக்கள், குறிப்பாக இளைஞர்கள் களத்தில் இரங்கி செயல்பட வேண்டிய தருணம் இது.