இந்தியா — ஒரு சுருக்கமான வரலாறு

சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் இந்தியாவில் ஆரியரின் ஊடுருவல் உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்திய ரலாற்றில் இதன் தாக்கத்தை சுருக்கமாகப் பார்ப்போம். இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியமான தகவல் என்பது ஆரியர்களில் இந்தியாவிற்க்கு வந்தவர்கள் ஆண்கள் மட்டுமே என்பது. அதாவது ஸ்டெப்பி புல் வெளிகளில் இருந்தும், அரேபிய பாலைகளில் இருந்தும் பொண்டாட்டி தொல்லை தாங்காமல் ஒடி வந்தவர்கள் என இவர்களை கொள்ளலாம். குளிர் பிரதேசத்து பெண்கள் வாழைப்பழம் வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், பாலை நிலப்பெண்கள் ஆப்பிள் வேண்டும் என்று அழுததாலும், தங்கள் பொறுமையை இழந்த ஆண்கள் கூட்டம் ஒன்று, இதோ வருகின்றேன் என்று கிளம்பி கைபர் போலன் கணவாய் வழியே சிந்து சமவெளியை அடைந்தது. அவர்கள் வந்த நேரம் பழங்குடி வாழ்க்கையில் இருந்து அரசுகள் உருவாகிக்கொண்டிருந்த காலம். வந்தவர்கள் புது மன்னர்களிடம் போய் தங்கள் துன்பத்தை சமஸ்கிருதத்தில் புலம்ப, அதுவே இந்திய தத்துவாமாக வளர்ந்தது என்கினறனர் ஆய்வாளர்கள். இவர்களின் நிலை கண்டு இரங்கிய மன்னர்கள், நம்மையே அழச்செய்தவன் குலத்தலைவர்களையும் நமக்காய் அழச்செய்வான் என்றென்னி, தங்கள் ஆலோசகர்களாகவும், தூதுவர்களாகவும் வைத்துக்கொண்டனர். இவர்கள் தூரத்து ஊர்களிலும், காடுகளிலும் உள்ள மக்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டனர். இவர்களின் சதியாலேயே சிறு தெய்வங்கள் மதத்திற்க்குள் கொண்டுவரப்பட்டு, இந்து மதம் என்னும் பெருதெய்வமதம் பிறக்கின்றது. இவ்வாறாக இவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கும் போது, தாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்பதை மறந்து இங்கேயே பெண்ணெடுத்து அவர்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வந்தனர். இல்லறமே நல்லறம் என்று மக்களுக்கும் மன்னனுக்கும் எடுத்துறைத்து வந்தனர். இவர்களை நம்பி கல்யாணம் செய்து கடும் மன உளைச்சளுக்கு ஆளான கவுதம சித்தார்த்தன் என்னும் மன்னன் இவர்களை பழி வாங்க உறுதி பூண்டான். பொளத்தம் பிறந்தது. புத்த மதத்தினர் ஆசையே அழிவுக்குக்காரணம் என்றனர். பெண், பொன் இரண்டும் மாயை என்றனர். தங்கள் மனைவிக்கு தங்க அட்டிகை வாங்கித்தர முடியாமல் தினமும் பழைய சோறு குடித்துக்கொண்டிருந்த ஆண்களை எல்லாம் பொளத்த சிந்தனைகள் பெரிதும் ஈர்த்தன. இதே சமயத்தில், ஆடை கூட அழிவுதான் என்ற சமண மதமும் பெருவளர்ச்சி அடைந்தது. மக்கள் புத்த மதத்தையும் சமணத்தையும் தழுவத்தலைப்பட்டனர். இந்த களோபரத்துக்கு இடையில் கிரேக்கதிலும் இன்னும் அதனை சுற்றி இருந்த தேசங்களிலும், இறைச்சியை மிளகுப்போட்டு வருத்தால் அபார சுவை இருப்பதை கண்டுக்கொண்டனர். மிளகுதேசமாம் இந்தியாவில் இருந்து அதனை வாங்க கப்பல் கட்டிக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தனர். இதனால், வியாபாரிகள் என்றொரு சமுகம் தோன்றி வளர்ச்சி அடைந்தனர். இவர்கள் கொல்லக்கூடாது, திருடக்கூடாது போன்ற அம்சங்களை போதித்த சமண, புத்த மதங்களை பெரிதும் விரும்பினர். இக்கருத்துகளை கள்வர் முதற்க்கொண்டு பரப்ப எண்ணி நிறைய செலவு செய்தனர். இதனால் இம்மதங்கள் இந்தியாவெங்கும் பரவி விரிந்த்து. இந்த நேரத்தில், இந்தியாவின் கடைக்கோடியில் தமிழினம் என்றொரு கூட்டம், கள்ளருந்தியும், கவிதை எழுதியும் காலம் கழித்து வந்தது. இவர்களை மூன்று பெரிய மன்னர்கள் ஆண்டு வந்தாலும் மூவருக்கும் பெரிய வேறுபாடு இன்றி ஒருத்தர் இன்னொருத்தரை அழிப்பதையே வேலையெனக்கொண்டு இருந்தனர். இதற்காக மாடு திருடுவது, திருடிய மாட்டை திருப்பி திருடுவது போன்ற போர்தந்திரங்களை கடைப்பிடித்து வந்தனர். இவ்வாறு இவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும் போதே, கர்னாடக தேசத்தில் இருந்து முத்தரையர் என்ற வம்சத்தினர், தமிழகத்தை பிடித்தன்ர். சமணர்களாகிய இவர்கள், கள்ளுண்டு போதையில் பெண்களின் இடையை பற்றி பாட்டெழுதிக்கொண்டு இருந்த தமிழர்களைக்கண்டு மனம் வெதும்பினர். அவர்களை திருத்த வேண்டி, திருக்குறள், நாளடியார், எட்டியார், முப்பத்திரெண்டு அடியார் போன்ற உபதேச நூல்களை எழுதச்செய்தனர். இவ்வாறாக அடுத்த இரு நூற்றாண்டுகளில் தமிழகம் எங்கும் சமணமும், புத்தமும் பரவிற்று! இது மன்னர்களோடும் மக்களோடும் மதுவருந்தி, மாட்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்தணர்களை கொதித்தெழச்செய்தது. ஆழவார்கள், நாயன்மார்கள் என்றொரு கூட்டம் பாட்டு பாடியே மக்களை கவர புறப்பட்டது. பாடல் இசை போன்றவை தடை செய்யப்பட்டிருந்த புத்த, சமண மதங்களால், இவர்கள் முன் போட்டியிட முடியவில்லை. கிளம்பிச்சென்றவர்களை துரத்திக்கொண்டேபோனதில் இமையமலையே வந்துவிட்டது. இவ்வாறாக, வைதிக பெருமதம் தென்கோடியில் இருந்து வட கோடிவரை பரவியது. இந்த சமயத்தில், ஆரியர்கள் புறப்பட்டு வந்த தேசங்களில் இருந்தவர்களுக்கு, தங்கள் முன்னோர்களின் நியாபகம் வந்தது. தங்கள் பாட்டிகளை ஏமாற்றிச்சென்றவர்களை பழி வாங்க எண்ணி படை எடுத்து இந்தியா வந்தனர். வந்த பிறகு தான் அரேபிய பிரியாணியை விட இந்திய பிரியாணி சுவையாய் இருப்பதை கண்டுக்கொண்டனர். இங்கேயே தங்க முடிவு செய்தனர். இவ்வாறாக முகலாய ஆட்சி இந்தியாவில் வேறூன்ற தொடங்கியது. பின் ஆங்கிலேயர் வந்ததும், காந்தி வந்ததும் நீங்கள் அறிந்ததே.எத்தனை மாற்றம் வந்த போதும், பழங்காலத்தில் தங்கள் வீட்டுக்காரம்மாவிடம் வாங்கிய அடிகளை ஆரியர்கள் மறக்கவில்லை.இந்து மதம் வளர்ந்த போது, அடிகளை குறைவாக வாங்க எண்ணி பல கட்டுபாடுகளை ஸ்மிருதிகளின் பெயரால் உள்நுழைத்து தங்களை காத்துக்கொண்டனர். ஆனால் சுதந்திரம் பெற்ற போது, காந்தியை சுட்டுவிட்டு பதுங்கியிருந்த நேரத்தில், அப்போதைய இந்திய அரசு பெண்களுக்கு வாக்குரிமை தந்ததையும், சொத்துரிமை தந்ததையும் தடுக்கமுடியவில்லை. பின் அடுத்த எழுபது ஆண்டுகளுக்கு கடும் போரட்டத்துக்கிடையே தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு இந்து/ஆரியர்கள் ஆளாயினர். பின் 2014ல் மனைவியால் கடும் துன்பத்துக்கு ஆளாகி, பின் தப்பித்து, டீ விற்றுக்கொண்டிருந்த மோடி என்றொரு தீர்க்கதரிசியின் கடும் முயற்ச்சியால் புது ஆரியவர்த்ததின் அடிக்கல் நாட்டப்பட்டது. இது மேலும் மேன்மேலும் வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Originally published at http://prvn.info.

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile | Blabber here: https://anchor.fm/praveen-p-a |

Feynmanism | Linuxian | Belongs to Nikon'varse | Bibliophile | Blabber here: https://anchor.fm/praveen-p-a |